Visitors

free hit counter

Thursday, 25 December 2025

ஒரு சொல்



 வார்த்தை

விரயம் வேண்டாம்

"ம்" மட்டும் சொல்

வாழ்ந்து விட்டு

போகிறேன்

உன் பிரிவு



 உன் பிரிவு

இறந்து போன
பறவையாய்
என்னுள்
புதைந்து போக

நினைவுகளோ
காற்றில்
பறந்து கொண்டிருக்கும்
இறகுகளாய்...

Monday, 22 December 2025

ரணங்கள்

 


எங்கோ

பறந்து வரும்
பெயர் தெரியாத
பறவையின் கூச்சல்
உன் நினைவுகளின்
ரணங்களை
ஞாபகப்படுத்திச்
செல்கின்றது...

விதை

 


என்னுள்

உனை விதைத்து
நான் வளர்ந்து
கொண்டிருக்கிறேன்

வா
முத்த நீரூற்று
பட்டு போகாமலிருக்க...

Saturday, 5 August 2023

புலம்பல்கள்-1


தேடித் திரிந்து வினையற்று 
 பாடிப் பறந்து பற்றற்று 
 காணக் கிடைக்கா ஒளி கண்டு 
 காலம் கடந்தேன் எனை வென்று! 

 தனியே அமர்ந்து சிந்தித்து சிந்தித்து 
 சிறைப்பட்டு இறுதியில் 
 உனை சந்தித்து 
 சரணடைந்தேன்! 

 ஓயாத எண்ணத்தை ஓட விரட்டி 
 தேயாத மதி போல 
 ஒரு வடிவமாக்கி 
 போராட்டம் ஏதுமின்றி 
 என்னுள் என்னை நான் கண்டேன்!

Sunday, 8 March 2015

யாரவளோ


உன் ஊரென்ன
உன் பேரென்ன
ஏதொன்றும்
என் காதல் அறியாதே

சிறு கண்ணாலே
எனை சிறை வைத்தாய்
என் கால்கள்
உன் பாதை அறியாதே

பெண்ணே! பெண்ணே!
உன்னாலே
என்னோடு
நித்தம் நித்தம்
போர் தான்....

வழி தேடி
அலைகின்றேன்
உன்னை பெற்ற
ஊர்தான்....

நீ நிலவா
மழையா
வாசப் பூவா
தேடி இங்கு
நான் தொலைந்தேன்...

என்னுயிரே! என்னுயிரே!
எனை வந்து சேராயோ
என் வாழ்க்கை நீயே தானே

ஒரு பொய் மானையே
இங்கு நான் தேடினேன்
இன்று நடுகாட்டில்
தவித்து நின்றேன்....

Sunday, 1 March 2015

உடும்பு


மனம் ஒரு குரங்காம்
இடத்திற்கு இடம் மாறும்
என் மனம் மட்டும்
உடும்பை போல
பிடித்து கொண்டிருக்கிறதே
உன்னை....