Visitors

free hit counter

Saturday, 13 December 2014

தமிழின் அர்த்தம் - கட்டுரை


நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால்
எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...?
தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...! தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும்
ஐந்து அலகு நிலையுடையது. அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார
ஐம்பூதத்திற்குள் பதி நிலையக்கரமாகும். இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்குவதால்
அனந்தாகார பேதங்காட்டும் உயிர்ச்சித்த
கலையக்கரமாம். பதி சித்தாத்ம கலைகளுக்காதாரமா
கி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும்.
த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை: த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.
ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.
ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல்
அக்கரம். நம் அண்டத்தைக் குறிக்கும். எல்லா மொழிகளுக்கும் பிதுர் (தந்தை)
மொழியென்று ஆன்றோர்களால்
கொண்டாடப்பட்டதும், இனிமையென்று நிறுத்தம்
சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான
சிறப்பியல் மொழியாகும். இவ்வாறு இராமலிங்க அடியகளார் கூறுவதைப்
போல் சுருக்கமாகச் சொல்வதானால் "தமிழ்
மொழியே அதி சுலபமாக சுத்த சிவானு பூதியைக்
கொடுக்க வல்லது".

நன்றி:- முகநூல் தமிழ் community

No comments: