Visitors

free hit counter

Sunday 14 December 2014

உலகின் தீரா மர்மங்கள் - ஸ்டோன் ஹென்ஜ்


உலகின் தீரா மர்மங்களில் ஸ்டோன் ஹென்ஜ்
முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
தோராயமாக இதன் வயதை 5000
ஆண்டுகளுக்கு முற்பட்டதாக
கணித்திருக்கிறார்கள். இன்றைய
பிரிட்டனின் மிகப்பழமையான
புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம்
என்பது கூடுதல் சிறப்பு.
ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க
எண்ணி பயணீத்தீர்களேயானால், ஒரு சில
மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில்
திடீரென இந்த அமானுஷ்ய இடத்துக்குள்
நுழைவீர்கள். இந்த இடத்தின் மயான
அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும்
உங்களுக்குள் ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம்
உண்டாக்கும்.
இது உருவாக்கப்பட்ட விதமாக
ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட
தகவல்கள் இதுதான்…
1) முதலில் கி.மு.3100ம் ஆண்டில்
மதச்சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள்
தோண்டப்பட்டிருக்கின்றன.
2) அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகள்
கழித்துதான் இந்த கல்
அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
வேல்ஸ் மலையிலிருந்து பெரிய பெரிய
கருங்கற்கள் கிட்டத்தட்ட 240மைல்
தொலைவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது.
சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில்
எதற்காக, யாரால், எப்படி இந்தக் கற்கள்
இவ்வளவு தூரம் எடுத்து வரப்பட்டிருக்கும்
என்பது மர்மமே. இவ்வாறு எடுத்து வரப்பட்ட
கற்கள் முற்றுபெறாத ஒரு இரட்டை வட்ட
வடிவில் மிட்சம்மர் சூரிய
உதயத்திற்கு அலைன்மெண்ட்
செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.
3) இதன் முன்னர் மூன்றாவது நிலையாக
கி.மு.2000வது ஆண்டில் மேலும் சில கற்கள்
25மைல்களுக்கு அப்பால் உள்ள
இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கிறது
.
4) இதன் பின்னர் மேலும் 500
ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு சிலரால்
இன்றைய குதிரைக் குளம்பு போன்ற வட்ட
வடிவத்தில் இந்தக்கற்கள்
மறுஒழுங்கு செய்யப்பட்டு
அடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று வரையிலும் இந்தக்கற்கள்
அடுக்கப்பட்டிருப்பதன் அர்த்தம்
எந்தவொரு முடிவையும் எட்டவில்லை.
இது ஒரு வழிபாட்டுத்தலம்,
வானவெளி சம்பந்தப்பட்ட காலண்டர்,
சுடுகாட்டு மயானம்
என்று விதவிதமான கதைகள்
திரிந்தாலும் இது இன்னமும்
தீர்க்கப்படாத ஒரு மர்மம்தான்!!!

நன்றி : முகநூல் அமானுஷ்ய நிகழ்வுகள்.

No comments: