Visitors

free hit counter

Wednesday, 10 December 2014

காதலர் தினம்


இன்று 
எல்லோரும் 
தாய்க்கு சமம். 
ஆம்! இதுவரை 
காதலை கருவறையில் 
சுமப்பது போல சுமந்து 
இன்று பிரசவிக்க போகிறார்கள்!!! 
இன்று மட்டும் 
எத்தனை உயிர்கள் 
பிறக்க போகின்றனவோ!!!
இன்று 
பல சிறகுகள் 
பறக்க தயாரிகிவிட்டன 
பல சிறகுகள் 
முறிய வலி கண்டன...!!!

இந்த நாள் 
நீ என்னை புரிந்ததற்கு 
நான் என்னை மறந்ததற்கு!!!

இனி 
பிறக்க போகும் 
எல்லா நாட்களும் 
நான் எனை 
மறக்க போவது உறுதி 
உன் காதலை 
வெளிப்படுத்தியதால்...!!!

நீ பார்வையால் 
சொன்ன காதலை விட 
இன்று நீ 
வார்த்தையால் சொன்ன காதல் 
என்னை மூர்ச்சையாக்கிவிட்டது!!!

நீ உதட்டு சாயம் பூசி 
உன் காதலை 
என் கன்னத்தில் பதிப்பாய் 
நான் என் உதிரம் கொண்டு 
உனக்கு உதட்டு சாயம் 
கொடுப்பேன்!!!

இன்று முதல் 
நம் வாழ்க்கையில் 
எரியும் மெழுகாக நான் 
அதில் வெளிச்சம் தரும் 
நெருப்பாக நீ!!!

இன்று 
நான் என் காதலை 
பரிசளித்தேன் 
நீ உன் காதலனை 
அறிமுக படுத்தினாய்..!!!

No comments: