Visitors

free hit counter

Saturday 13 December 2014

தமிழ் மொழி பெருமை


உலகில் தோன்றிய முதல் மொழிகளில் எமது தமிழ் மொழியும் ஒன்று என்று சொல்லப் படுகிறது. சுமார் 20.000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய எமது மொழி இன்று ஏறத்தாழ 80,000,000 பேர்களின் தாய்மொழியாக அமைந்துள்ளது. ஆனால், எமது தமிழ் மக்கள் எந்த நாடுகளில் எல்லாம் வாழ்கின்றார்கள் என்றும், அந்த நாட்டில் தமிழ் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்றும் உங்களுக்குத் தெரியுமா? இல்லை என்றால், இந்த அறிவு டோஸைப் படித்துத் தெரிந்துகொண்டு, கடைசியில் நான் கேட்கும் ஓர் கேள்விக்கும் பதில் கூறிவிடுங்கள்.

>1,000,000:

இந்தியா (India) [72,000,000], இலங்கை (Sri Lanka) [3,100,000], மலேசியா (Malaysia) [1,800,000]

>100,000:

அமெரிக்க ஐக்கிய நாடு (USA) [300,000], ஐக்கிய இராச்சியம் (UK) [300,000], தென்னாப்பிரிக்கா (South Africa) [250,000], சிங்கப்பூர் (Singapore) [200,000], கனடா (Canada) [200,000], மியான்மர் (Myanmar) [150,000], பிரான்சு (France) [125,000], ரீயூனியன் (Réunion) [120,000], மொரிசியசு (Mauritius) [115,000]

>10,000:

பிஜி (Fiji) [95,000], இந்தோனேசியா (Indonesia) [75,000], ஜெர்மனி (Germany) [50,000], சுவிட்சர்லாந்து (Switzerland) [40,000], ஆஸ்திரேலியா (Australia) [30,000], இத்தாலி (Italy) [25,000], நெதர்லாந்து (Netherlands) [20,000], நோர்வே (Norway) [15,000], ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) [10.000], தாய்லாந்து (Thailand) [10,000]

>1,000:

டென்மார்க் (Denmark) [7.000], புரூணை (Brunei) [7.000], பகுரைன் (Bahrain) [7.000], பகாமாசு (Bahamas) [7.000], சீன மக்கள் குடியரசு (China) [5.000], சிசெல்ஸ் (Seychelles) [4,000], கத்தார் (Qatar) [4,000], நியூசிலாந்து (New Zealand) [3,000], வியட்நாம் (Vietnam) [3,000], சுவீடன் (Sweden) [2,000], தென் கொரியா (South Korea) [1,000], பாகிஸ்தான் (Pakistan) [1,000], கம்போடியா (Cambodia) [1,000], ஜப்பான் (Japan) [1,000]

1,000 மக்களுக்குக் கீழ்பட்ட தொகையுள்ள நாடுகளையும் இந்த இடத்தில் குறிப்பிட்டால் இந்தப் பட்டி நீண்டு விடும், எனவே இத்துடன் நிறுத்தி விடுறேன். பார்த்தீர்களா, எமது தமிழ் மக்கள் இவ்வளவு நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். நான் ஜேர்மனியில் வசிக்கின்றேன். இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே, நீங்கள் எந்த நாட்டில் வாழ்கின்றீர்கள்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


நன்றி:- முகநூல் தமிழ் community 

No comments: