Visitors

free hit counter

Sunday, 7 December 2014

உன் மௌனம் கொடியது


அழைத்தது
நீயே தானே
இன்று ஏனோ
விலகி சென்றாய்

புரியாமல்
 நானும் இங்கே
தனியாக
தவித்து நின்றேன்

எனக்கான வாழக்கை
உன் மௌன சிறையில்
கிடக்கிறதே
பதில் வேண்டி பெண்ணே
என் ஆயுள் முழுதும்
வேகிறதே

தரையில் மோதும்
இடியை தாங்கும்
காதல் வலியில் அய்யோ
இந்த நெஞ்சம் சாகும்

மழையின் சாரல்
தீயை மூட்டும்
நிலவின் ஒளியில் அய்யோ
என் உடலும் நோகும்...

இதுதானா
காதல் இதுதானா
பேரன்பே
வீசும் புயல்தானா...

விழிகள் அழுகிறதே
விழி வழி
உயிரும் கரைகிறதே
காதலி காதலுமின்றி
காலங்கள் எரிகிறதே....

No comments: