Visitors

free hit counter

Tuesday, 2 December 2014

நட்புக்குள்ளே காதல்


என் தோழியே
என்னை வெறுத்தாய்
சொல் கொண்டு தான்
என்னை உடைத்தாய்

மண் மீதிலே
விழுந்த இடியாய்
என் நெஞ்சிலே
ஆனாய் ரணமாய்

காதல் என்பது
கடவுள் போலவே
வரங்கள் வேண்டினேன்
என் தோழியே

நட்பில் காதலும்
இயற்கை தானடி
மௌன சிறையினை
உடைத்து கொள்ளடி

அசுரன் போலவே
வதங்கள் செய்கிறாய்
அமிலம் ஊற்றியே
எரித்து கொல்கிறாய்

உண்மை மொழிகிறேன்
உணர்ந்து கொள்ளடி
உன்னால் மட்டுமே
இங்கு வாழ்கிறேன்!...

No comments: