Sunday, 30 November 2014
ஊடல்
பெண்:
உன்னை நம்பியே
உலகை வெறுத்தவள்
உயிரை வளர்த்தவள்
நான்தானடா
கோபம் கொண்டு நீ
அடிக்க பார்க்கிறாய்
உந்தன் காதலும்
பொய் தானடா
ஆண்:
மிருகமாவது மனித இயல்பு தான்
கோபம் கொள்வது வீண் தோழியே
அடி போடி பெண்மையே
என் காதல் உண்மையே
உயிரை கொடுத்து நான் நேசித்தேன்
பெண்:
காயம் பட்ட நான் மருந்து கேட்கிறேன்
மறுத்து போகிறாய் என் தோழனே
ஆண்:
மறுத்து போகவா நான்
உன்னை விரும்பினேன்
புரிந்து கொள்ளடி என் தேவியே
கண்ணீர் துளிகளை கண்ட நிமிடத்தில்
மடியக்கூடிடும் வலியை உணர்கிறேன்
மரணம் தொட்டு நான் வாழ்கிறேன்
இது காதல் தானா
ஒற்றை வார்த்தை சொல்லி
எந்தன் வாழ்வின்
வேரை அறுத்தவள்
கண்கள் ரெண்டில் தீயை வைத்து
உயிரோடு வதைத்தவள்
பூவை நீட்டி காதல் சொல்ல
புயலாய் என்னை அடித்தவள்
காதல் என்றால் என்ன என்று
புரியாமல் நடித்தவள்
மரணம் பெற்ற கைதி போல
தூக்கில் என்னை ஏற்றினாள்
துடிக்க துடிக்க சாகும் போது
கைகள் தட்டி ரசிக்கிறாள்
நரகத்தின் வேதனை
தினம் தினம் காண்கிறேன்...
காதல் தருவாயா
விழிகளில் விழுந்து
இதயத்தில் நுழைந்தாய்
இதயத்தில் நுழைந்து
துடிக்க ஏன் மறந்தாய்?
அடிக்கடி உன்னை பார்ப்பது தெரியும்
முதல் முறை உன்னை
பார்த்ததும் என்னை
மறந்தது உண்மை
பெண்ணே உன்னால்
காதல் எனும் வாழ்க்கையை
நானும் இங்கு வாழ்கிறேன்
தருவாய் விழி பார்வை என்னிலே
மனமும் இங்கு பைத்தியம்
போலே எங்கும் அலையுதே
நீ வந்தால் கரையும்
எந்தன் யுகமே!...
கவிதை எழுதவே
கைகள் ஏங்குதே
விரல்கள் அனைத்தையும்
ஏனோ முறிக்கிறாய்
காதல் கோட்டையை
உடைத்ததேனடி
எந்தன் நெஞ்சையும்
நூறாய் உடைக்கிறாய்...
இலங்கை தமிழர்க்காக
கொடுங்கோலனின்
வேரினை அறுத்திட
இனி வரும் காலங்கள்
நம் தமிழுக்கே உரைத்திட
புலி ஒன்று இறந்தது
சிங்கத்தின் தந்திர வலையிலே
வலிகளை கண்டிட்டோம்
உதவ வழியின்றி துண்டுட்டோம்
நம் இறப்பினை
காட்டியே ஆளுது
போர்க்கொடியினை
தூக்கிட ஏங்குது
நட்பு நாடென
தாங்குது
நடிப்பை காட்டிட
மக்களை தேடுது
நாடகம் பார்க்க வந்த
ரசிகனை போலே இந்த
மானங்கெட்ட உயிரும் வாழுது!!!
Saturday, 29 November 2014
நல்ல நண்பன் வேண்டுமென்று.....
இனி அழ கண்ணீர் இல்லை
அத்தனையும் உன் சடலத்தில்
பன்னீராய் தெளித்து விட்டேன்..
நம் அழகான நினைவுகள்
சூரியன் கதிர் பட்டு
கரையும் பனிப்போல ஆனது
என் எல்லா துன்பங்களிலும்
இன்பமாய் இருந்தாய்..
உன் முகம் மூடும் சடங்கில்
என் மொத்த இன்பங்களையும்
மூடி கொண்டாய்.
கடவுள் ஒரு துரோகி
அவனுக்கு நல்ல நண்பன்
வேண்டுமென்று
உன்னை எடுத்து கொண்டான்
என் நட்பை பிரித்து விட்டான்...
Thursday, 27 November 2014
காதலி தரும் முத்தம்
காதலில் ஒரு யுத்தம்
காதலி தரும் முத்தம்
வேண்டியே தினம்
காதலன் இதழ்
சுத்தும் நித்தம்...
நெற்றியில் முதல் முத்தம்
மற்றவை உடல் மொத்தம்
காதலி மனம்
சொர்க்கத்தில் நமை
காவல் வைக்கும்....
முத்தம் தரும் பட்டுக்கிளி
மெல்ல இனி விட்டுப் பிடி
மெல்லிடை தனை தொட்டுப்பிடி
காலங்கள் இனி இந்த
ஜென்மங்கள் வரை தீராதோ...
இதழ் சேர விடு
இன்பம் தேடி விடு
கடவுள் காணும் வரை
இமை மூடி விடு...
விரக தாபங்கள் கூடி போகுமே
விரைவில் தேடிடும் பூக்கள் மஞ்சமே...
காதல் தந்து போனால்....
பெண்ணே!
ஏன் உயிர் வேதனை
தந்தாய்!
பெரும் சோதனை
உன் விழி ஈர்ப்பு
விசை தன்னில்
எனை ஈர்க்கிறாய்
உன் இதழ் தீட்டும்
சிரிப்பு ஒன்றில்
எனை சாய்க்கிறாய்
நான் படும் துன்பம்
அதைக்கேட்டு
நீ ஓடி வா
உன் கரம் தந்து
எனை மீட்ட
நீ தீண்டி போ
உன் பார்வை
என்னில் பட்டால்
தடுமாறிப்போகும் மனமே
நீ என்னை
தாண்டி சென்றால்
என் உயிரும் செத்து விடுமே
நீ உந்தன்
காதல் தந்தால்
என் வாழ்வும் அர்த்தம் பெறுமே
தரிசனம் கிடைக்காதா!..
என்னை விட்டு நீ
ஏன் பிரிந்தாய்?
விழிகள் ரெண்டை
ஏன் பறித்தாய்?
நடை பிணமாய்
அலைய வைத்தாய்
என் நாட்கள் சாகடித்தாய்...
நீ அருகினில் இருந்திடவே
நான் பலரை இழந்து விட்டேன்
அதை ஏனடி நீ மறந்தாய்
என் உயிரை நீ வதைத்தாய்
ஒரு வண்டாய் நானும் உன்னை
அந்த பூக்கள் முழுதும் தேட
ஒரு மீனாய் நானும் உன்னை
அந்த நதியில் எங்கும் தேட
ஒரு மேகம் போல வந்து
அந்த நிலவில் உன்னை தேட
அடி உன்னை எங்கும் தேடி
என் காலம் முழுதும் தொலைக்க
பெண்ணே!
நான் படும் வேதனை
உன்னால் தீர்ந்திடுமா?...
உன் அழகான
விழி ரெண்டை
நான் தேடினேன்
அதில் என் தேகம்
கரைந்தோடும்
வரம் வேண்டினேன்
உன் விரல் தீண்டும்
சுகம் வேண்டி
நான் வாடினேன்
உன் மடி சாய்ந்து
உயிர் போக
நான் ஏங்கினேன்
என் கனவாய் நீயும் வந்து
என் இரவை நானும் இழக்க
என் நினைவாய் நீயும் வந்து
என்னை நானும் தொலைக்க
அடி வருவாய் நீயும்
நேரில் தருவாய் தரிசனம்!..
உன் காதல் கூட தேவை இல்லை
உன்னை பார்த்து கொண்டிருக்கும்
சுகம் போதுமடி.......
காதல் தந்து போ
எதற்காக பார்க்கிறாய்
எனை எங்கோ சேர்க்கிறாய்
புரியாத பெண்மையே
நான் ஊமை யானேன் உண்மையே
மழை நின்றும் சாரலாய்
மனதெங்கும் தூறினாய்
அறியாத காதலின்
ஆழம் கண்டேன் காதலி
எனை தீண்டி போகும் தென்றலே
எனில் சுவாசமாக வந்து போ
உயிர் வாழ தானே கேட்கிறேன்
உன் காதல் தந்து போ...
உன்னை மட்டும் இங்கு தேடும் கண்களடி
உனதருகில் வாழ நெஞ்சம் ஏங்குதடி...
புரிந்து கொண்டேன் உன்னை...
தனிமை தருகின்ற
சுகமென்று நினைத்தேன்
தவிக்க செய்தாயடி
தாகம் தீர்க்கின்ற
நீராக நினைத்தேன்
அமிலம் பொழிந்தாயடி
உன் கண் பார்வை
கூரான வேல் தானடி
நான் தடுமாறி
விழுந்தென்னை
இழந்தேனடி
எனை எரித்தாலும்
என் தேகம் சாகாதடி
எனை ஏனோ
வெறுத்தாயே
இறந்தேனடி
என் காலம்
உனக்காக தான்
என்று நினைத்தேன்
காயம் தந்தாயடி
காதல் கருவாக்கி
நான் உன்னை
சுமந்தேன்
உயிரை அறுத்தாயடி
உன் பார்வைகள்
ஒவ்வொன்றும்
அனல் தானடி
எனை உயிரோடு
எரித்தாயே அது ஏனடி
உன் வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
விஷம் தானடி
உன் கடும் சொல்லால்
மண்ணோடு புதைத்தாயடி
Wednesday, 26 November 2014
காதல் தந்து போ
உன் நினைப்பில் ஏங்கையிலே
ஏதேதோ எனை பண்ணுற...
உன்னுடைய பார்வையிலே
கண்டபடி நான் அலைய
கண்ணால வதம் பண்ணுற...
முறைச்சி பார்த்தாலே
நொறுங்கி போவேனே
சிரிச்சி போனாலென்ன...
உரசிப் போனாலே
உருகிப்போவேனே
தீண்டிப் போனாலென்ன...
கடும் பாறையால்
நெஞ்சம் ஆனதோ.
ஒரு தேரை போல்
நானும் ஊறவோ.
உன்னை சேராமல் போனாலே
என் வாழ்க்கை வீணாகுமே...
Labels:
கவிதைகள்
மூட நம்பிக்கை
அர்ச்சனை தட்டில் விழும்
பக்தனின் சில்லரையை விட
நோட்டுகளுக்குத்தான்
கவனிப்புகள் அதிகம்...
மூலைக்கொன்றாய் வளரும்
மரங்களின் நிழலும் கூட
வியாபாரமாக்கப்பட்டது
ஒரு ரூபாய் மஞ்சளும்
குங்குமமும் பூசப்பட்டு...
பல்லி விழுந்தாலும்
தடுக்கி விழுந்தாலும்
தடையென எண்ணும்
மூளையில்லா
முட்டாள்கள் அதிகம்.
நிர்வாணமாய் அலையும் ஊரில்
கோமணம் கட்டியவன்
கோமாளியாம்...
நானும் நிர்வாணமாக்கப்பட்டேன்!.
Labels:
கவிதைகள்
Tuesday, 25 November 2014
காதல் ஒரு வியாதி
தேரைப் போல
நான் இருந்தேன்
வீதியில் வந்து
விட்டுப்புட்டா....
ராஜாவைப் போல்
நான் இருந்தேன்
கோமாளியா இப்போ
மாத்திப்புட்டா....
தீயைப் போல இருந்தேன்
தீவைப் போல ஆனேன்
தேடி வந்து காதலிச்சு
தன்னந்தனியா புலம்ப விட்டாளே....
காதல் ஒரு வியாதியா
நெஞ்சுக்குள்ளே போனதே
எந்த மருந்தும் கொடுத்துதான்
வியாதி போகல...
கண்ண வச்சு பாத்து தான்
உயிரை உருவி எடுத்திட்டா
செத்த பிணத்த போலவே
நான் சுத்தி அலையுறேன்.....
Labels:
கவிதைகள்
என்னைக் கொல்லாதே
உன்னை பிரிந்த
என்னில் உயிரில்லையே
என் நிழலும்
எனக்கு இங்கு துணையில்லையே
ஒரு சொல் ஒரு முறை
அன்பே உன்னில் வாராதா
அடியே அதிலே
எந்தன் ஜீவனும் வாழாதா
பூக்கள் நீயல்லவா
உதிர்வது நானல்லவா
காற்று இல்லாமலே
நானும் வாழ்ந்திடுவேன்
நீயும் இல்லாமலே
எங்கே போய் தொலைவேன்
விழி மூடும் கனவில் கூட
விலகி செல்லாதே
உயிர் போக்கும்
மௌனம் கொண்டு
என்னைக் கொல்லாதே.....
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)