Visitors

free hit counter

Monday, 24 November 2014

காதல் தெய்வம்


கண்களில் விழுகிறாள்
தேவதையோ?.
இதயத்தில் நுழைகிறாள்
யாரிவளோ?..

உயிரை எடுத்து
உயிரை கொடுத்தாள்
வாழ்க்கைப் பயணம்
இனிமை கொடுத்தாள்

சிரிக்கிறேன் மணிகளாய்
சிதறுகிறாள்...
நடக்கிறேன் நிழலென
தொடருகிறாள்...

காதல் கோவிலிலே
தெய்வம் ஆனவளே
காலம் சிறந்திடவே
வரங்கள் தருபவளே

வானம் மழை
காற்று பூமி
நீயாய் ஆனதடி..
இந்த இன்பம்
போதும் பெண்ணே
சுகமாய் சாவேனடி...

No comments: