Visitors

free hit counter

Thursday, 27 November 2014

தரிசனம் கிடைக்காதா!..


என்னை விட்டு நீ
ஏன் பிரிந்தாய்?
விழிகள் ரெண்டை
ஏன் பறித்தாய்?
நடை பிணமாய்
அலைய வைத்தாய்
என் நாட்கள் சாகடித்தாய்...

நீ அருகினில் இருந்திடவே
நான் பலரை இழந்து விட்டேன்
அதை ஏனடி நீ மறந்தாய்
என் உயிரை நீ வதைத்தாய்

ஒரு வண்டாய் நானும் உன்னை
அந்த பூக்கள் முழுதும் தேட
ஒரு மீனாய் நானும் உன்னை
அந்த நதியில் எங்கும் தேட
ஒரு மேகம் போல வந்து
அந்த நிலவில் உன்னை தேட
அடி உன்னை எங்கும் தேடி
என் காலம் முழுதும் தொலைக்க

பெண்ணே!
நான் படும் வேதனை
உன்னால் தீர்ந்திடுமா?...

உன் அழகான
விழி ரெண்டை
நான் தேடினேன்
அதில் என் தேகம்
கரைந்தோடும்
வரம் வேண்டினேன்

உன் விரல் தீண்டும்
சுகம் வேண்டி
நான் வாடினேன்

உன் மடி சாய்ந்து
உயிர் போக
நான் ஏங்கினேன்

என் கனவாய் நீயும் வந்து
என் இரவை நானும் இழக்க
என் நினைவாய் நீயும் வந்து
என்னை நானும் தொலைக்க

அடி வருவாய் நீயும்
நேரில் தருவாய் தரிசனம்!..

உன் காதல் கூட தேவை இல்லை
உன்னை பார்த்து கொண்டிருக்கும்
சுகம் போதுமடி.......

No comments: