Visitors

free hit counter

Sunday, 18 January 2015

காதலும் நானும்


சிலு சிலுவென
எந்தன் நெஞ்சை
காதல் வந்து தாக்குதம்மா!
பட படவென
நெஞ்சமெங்கும்
பட்டாம்பூச்சி ஓடுதம்மா!
பூவினை பிடித்து
வானத்தில் பறந்தேன்
பூலோகம் தாண்டி
வாழ்கிறேன்!!!

விடு விடுவென
எந்தன் தூக்கம்
என்னைவிட்டு போனதம்மா!
சல சலவென
கனவில் உந்தன்
கால் கொலுசின் ஓசையம்மா!
காதலில் பிறந்தேன்
காதலில் வளர்ந்தேன்
காதலினால் இங்கு வாழ்கிறேன்!!!

காதலியே! காதலியே!
உனது வருகையால்
பூரிக்கிறேன்!

தேவதையே! தேவதையே!
உனது வாசத்தில்
சுவாசிக்கிறேன்!

மெலிதான உந்தன் முத்தத்தில்
நான் மூர்ச்சையானேன் மொத்தத்தில்!!!

No comments: