எண்ணிலடங்கா இன்பம்
உன் வரவின் காரணமாக...
எத்தனை நாள்
உன் வருகைக்காக...
என் காலங்கள் கரைவது!
இன்றாவது வந்தாயே விரைவாக...
வினா ஒன்று எழும்புது என்னுள்!
இன்று மட்டும் ஏனடி
விரைவாய் வந்தாய்!...
காணாமல் போன
என் இதயத்தை
திருப்பி தர வந்தாயா
வேண்டாமடி கண்ணே!
அது உன்னிடமே இருக்கட்டும்
பேரின்பம்தான் எனக்கு!!!
அழகாய் அருகில் வந்தாய்
விரைவாய் விசாரித்தாய்
சுகமா என்றாய்
உன்னை காணும் வரை
சுகமில்லை என்றேன்
விளையாட்டாய் சிரித்தாய்
விபரீதம் அறியேன்
அண்ணா! என்றாய்...
ஆடிப்போனேன்!!
ஆசை கடிதம் எடுத்து
கொடுத்து விடுங்கள்
உங்கள் நண்பனிடம் என்றாய்!
நிழல் ஒன்று இங்கே
நிஜம் தேடும் சோகம்
பறிபோன வாழ்க்கை
என்று எனை வந்து சேரும்....
No comments:
Post a Comment