Visitors

free hit counter

Monday, 12 January 2015

ஆடி மாத பிரிவுக்காக....


பாடப்  புத்தகத்தின்
பக்கங்களை  வாசித்ததை  விட...
உன்  பெயரை  வாசித்து
சுவாசித்த  நாட்கள்  தான்  அதிகம்!

விதியின்  விளையாட்டால்
விடைபெற்று  செல்கிறாய்
தற்காலிகமாக...

யாருக்கு  தெரியும்?
நான்  பல  ஜென்மங்கள்
கடந்து  செல்வதை...

நலம்  விசாரிக்க
நான்  வருவேன்...
ஆனால்  நாட்காட்டி
நகர  மறுக்குமே!...

பல  கிறுக்கல்கள்
விவரம்  தெரியாமல்...
அர்த்தம்  புரியாமல்...

அடிமையாக  வாழ்ந்து
கொண்டிருப்பேன்!
காலத்தின்  பிடியில்!...

துவண்டு  போகிறேன்!
உன்  பிரிவை  எண்ணி...

ஏனோ  பிரிவின்  வாட்டத்தால்
பல  நேரம்  சாகடிக்கப்படுகிறேன்!...

என்  உயிரான  உன்னை
உன்  வீட்டிற்கு  அனுப்புகிறேன்!
ஆடி  மாத  பிரிவுக்காக....

No comments: