கண் பார்வை தனில்
எனை தின்றாள்
காற்றை போல் சுவாசம்
எனில் தந்தாள்
மாற்றங்கள் அத்தனையும் தந்து
புதிய உயிராய் வடித்தாள்
பொற்கோவில் சிலையை
போல வந்தாள்
புது பாஷை
மௌனங்களில் தந்தாள்
இதழ் தீட்டும் புன்னகை ஒன்றில்
காதல் நெஞ்சை கொடுத்தாள்
என் அழகான மாடத்தில் பூவானவள்
என் வான் மேக கூட்டத்தில் மழையானவள்
நானானவள்......
No comments:
Post a Comment