வான் மழை தூறி
வளம் காண
காத்திருக்கும் நிலம் போல
உன் விழிப்பார்வை
எனை காண
காத்திருக்கிறேன்
தேன் தீண்ட
வண்ணத்து பூச்சி வருமென
பூத்திருக்கும் மலர் போல
உன் வழி மீது
காதல் கொண்டு
பூத்திருக்கிறேன்
தாய் மடி தேடி
தலை சாய்க்க
ஏங்கும் சேய் போல
உன் தோள் சாய்ந்து
நான் தூங்க
ஏங்குகிறேன்
சூரியன் நினைவிலே
மாலை வரை
காத்திருக்கும் மலை போல
உன் நினைவாலே நான்
தினந்தோறும் தூங்குகிறேன்
உன் வாச காற்றில்
அன்பே நான் வாழ்கிறேன்
இல்லை சாகிறேன்.....
No comments:
Post a Comment