Visitors

free hit counter

Tuesday, 6 January 2015

காதல் தந்தாய்


காதல்  தந்தாய்
காற்றில்  நானும்
மிதந்திருந்தேன்

காலம்  எல்லாம்
உன்  நினைவில்
நான்  இருந்தேன்

அழகாக  நீ  சிரித்தாய்
தனியாக  பேச  வைத்தாய்

பூக்கள்  ஏந்தி  உந்தன்  வழி
நான்  இருந்தேன்
காத்திருந்து  கால்  வலிக்க
நான்  நகர்ந்தேன்

புயல்  போல  நீயும்  வந்தாய்
வலி  கூட  மறைய  வைத்தாய்

வானவில்லை  போல்  வாழ்க்கையில்  வந்தாய்
வண்ணங்களால்  மகிழுகிறேன்
காற்றாய்  வந்துதான்  சுவாசம்  நிறைந்தாய்
உன்னால்  நானும்  வாழுகிறேன்
வெயில்கூட  ரசிக்க  வைத்தாய்
மழையோடு  கரைய  வைத்தாய்
தனியாக  நான்  இருந்தால்
நினைவாலே  இனிக்க  வைத்தாய்

உன்னிடத்தில்  நான்  பேசும்  போதெல்லாம்
உலகத்தை  மறந்துவிட்டேன்
உன்னை  மட்டும்  நான்  நினைக்கையிலே
என்னையே  தான்  மறந்துவிட்டேன்
இமையோடு  நீ  இருந்தால்
இமைக்காமல்  நான்  இருப்பேன்
நீயின்றி  நான்  இருந்தால்
உயிரின்றி  நான்  இறப்பேன்....

No comments: