நினைவை கொடுத்துவிட்டு
கனவினை கேட்டாளே
என்னை விலக்கி விட்டு
நிழலினை ரசித்தாளே
பூவுக்கு பணம் கொடுத்து
முள்ளை மட்டும் கேட்டாளே
சிறகினை உடைத்து விட்டு
பறந்திட சொன்னாளே
நிலவை கொடுத்து விட்டு
வானம் அதை பறித்து கொண்டாள்
கண்களை பறித்துவிட்டு
காட்டில் என்னை அலைய விட்டாள்
வார்த்தையால் தீயை வைத்து
என் மனதை கொழுத்தி விட்டாள்
காயங்கள் படுத்தவில்லை
உயிரை மட்டும் எடுத்து விட்டாள்
கண்கள் அழுதுருந்தால்
கைகள் துடைத்திடலாம்
உள்ளம் அழுதுருந்தால்
எங்கே முறையிடலாம்
பாசமுமில்லை பந்தமும் இல்லை
வாழ்வது இங்கே வீண்தானே!!!
No comments:
Post a Comment