விழிகள் ரெண்டில் வசிப்பவள்
என் இதயக்கூட்டை கலைத்தவள்
குழந்தை போல சிரிப்பவள்
என் இரவின் தூக்கம் கெடுத்தவள்
நிலவை போல இருப்பவள்
என் மனதில் நுழைந்து வதைப்பவள்
செவ்விதழில் என்னை வளைத்தவள்
உயிர்க்காதல் எனக்கு கொடுத்தவள்
பூவிழி பார்வையில் பூக்கொடுத்தாள்
தீண்டும் விரலில் தீக்கொடுத்தாள்
தேவதை போலவே தேடி வந்தாள்
புது வாழ்க்கை தான் கொடுத்தாள்
No comments:
Post a Comment