ஒரு பக்கம் இன்பம் கொடுக்கிறது
மறு பக்கம் இம்சை கொடுக்கிறது
காதல் கடவுளா?
இல்லை மிருகமா?
புரியாமல் நானும் தவிக்க...
அலை போல காலை தொடுகிறது
வலை வீசி மனதை இழுக்கிறது
காதல் சொர்க்கமா?
இல்லை நரகமா?
அறியாமல் என்னை இழக்க...
மழைச்சாரலும் என் புவி நனைக்க
என் கண்களை கனவுகள் பறிக்க...
இரு சிறகுகள் இன்றி பறக்கிறேன்
இந்த காதல் என்னில் நுழைய...
No comments:
Post a Comment