Visitors

free hit counter

Wednesday, 7 January 2015

நீ கிடைக்க...


உன்னை  கண்டதும்  இதயத்தில்
ஒரு  பூக்கள்  தோட்டமே  பூக்குதே
உந்தன்  விழி  என்னை  பார்ப்பதால்
என்னில்  புது  உயிர்  பிறக்குதே

காதல்  வந்ததே  நெஞ்சில்
எந்தன்  வானில்  காற்றும்  மழையும்
தினமும்  வருதே
உந்தன்  இதழும்  சிந்தும்  சிரிப்பில்
அட  எந்தன்  உள்ளமும்
உறைந்து  விடுதே

அய்யோ  அய்யய்யோ
என்னமோ  பண்ணியதே

விழிகளில்  விழுந்து  நீ
இதயத்தில்  இடம்  பிடி
மனதினில்  காதலை  விதைத்து
நீ  கரம்  பிடி
என்  கண்ணே

சிறு  சிறு  சிரிப்பினில்
தினம்  என்னை  கரைத்திட

தொடுகின்ற  பொழுதினில்
தினம்  என்னை  தொலைத்திட
வா  பெண்ணே

வாடினேன்  உன்னை  தேடினேன்
வாழ்வெல்லாம்  வெளிச்சம்  தந்திட
ஆசைகள்  என்  சோகங்கள்
யாவையும்  அன்பே  தீர்த்திட
நீயும்  வந்தாலென்ன

காதல்  வந்து  என்  நிழலும்  கனக்கும்
தனிமை  என்னை  கொல்லும்
நிலவின்  ஒளியும்
அடி  தினமும்  வேண்டி
என்  இரவும்  இம்சை  பண்ணுதே
என்னை  வெல்லுதே

வா  அன்பே
உன்னை  நேசிக்கிறேன்
வாழ்  முழுதும்
உன்னை  சுவாசிக்கிறேன்
தீ  இனிக்க  நீ  என்னமோ  பண்ணினாயே

பூவில்  தூங்கும்  ஒரு  தேனை  போல
நீயும்  வருவாய்
என்னில்  கலப்பாய்
தண்ணீர்  வாழும்  சிறு  மீனை  போல
உன்னில்  வாழ  வரம்  கொடுப்பாய்
எனை  ஏற்பாய்

ஓடி  வா! மேகங்களே
தூவுங்கள்  மழை  பூமியிலே

நீ  கிடைக்க
நான்  புண்ணியம்  பண்ணினேனே

No comments: