Visitors

free hit counter

Wednesday, 7 January 2015

காதலி எங்கு இருக்கிறாய்....


காதலி  எங்கு  இருக்கிறாய்
கனவிலே  காட்சி  அளிக்கிறாய்
தினம்  தினம்  என்னை  கொல்கிறாய்
அன்பே

அடி  என்  நெஞ்சம்
உன்னை  தேடி  அலையாதோ
நீயின்றி  நானும்  வாழ்ந்தால்
உயிர்  பிரியாதோ

பார்க்கும்  திசைகளெல்லாம்
அடி  நீயல்லவா
கூவும்  குயில்களிலே
உந்தன்  குரலல்லவா

அடி  காற்றில்  உடலும்  பறந்திடுதே
தூறும்  மழையில்  கரைந்திடுதே

அடி  நான்  போகும்  பாதை
பாலைவனமாக
நீ  வந்தால்  மாறிப்போகும்
பூவாக

உன்னோடு  நானும்
சேர்கின்ற  நாளை
எண்ணி  நானுமே
தினம்  தேய்ந்துபோகிறேன்

என்  வானம்  எங்கும்
அட  கருப்பாக  தோன்றும்
நீ  வந்தால்  என்  வானில்
நிறமும்  தோன்றுமே

என்  வாழ்க்கை  இப்படியே
தான்  படைத்தானே
ஒரு  பூ  பட்டு
காயமாக்கி  வதைத்தானே

உந்தன்  காதல்
மனதில்  வலி  தோற்றுவிக்கும்
ஒரு  நோயாக
நானும்  அதில்  விழுந்து
வதைபடுவேன்  சுகமாக
உயிர்போக  வலி  கண்டிருப்பேன்

இதோ  எந்தன்  உயிர்  போகிறதே....

இது  போதும்  கண்மணி
என்  வாழ்வின்  பயனை  அடைவேன்!
இருந்தாலும்  நெஞ்சிலே
உந்தன்  நினைவில்  உயிரை  இழப்பேன்!

முதன்முறை  சாக  தோன்றுதே
முடிவின்றி  வாழ்வும்  தொடருதே
ஒருமுறை  காட்சி  கொடுத்திடு
காதலி….

No comments: