பூக்கள் சுடுகிறதே
காற்றுமே புயலாய் வருகிறதே
மழைத்துளி என்னில் விழுந்து
மண்ணில் கரைக்கிறதே
காதல் இதுதானா
தினம் தினம்
சாவது விதிதானா
இதயத்தை அமிலம் ஊற்றி
கழுவுவது சரிதானா
எந்தன் நிலா வார்த்தைபட்டு
இன்று நூறாய் உடைகிறதே
நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சம்
கரைந்து கடலில் கலக்கிறதே
நினைவுகள் தீயாய் சுட்டதே
சரிதானா காதல் சரிதானா
நீயுமின்றி வாழ்வது சரிதானா
அழியாத காலம் எல்லாம்
கழுவேறி மடிகிறதே
அது போலத்தானே அன்பே
உயிர்போக தவிக்கிறதே
மலை பாரம் தாங்கும்
என் இதயம் இன்று வலிக்கிறதே
வெறுக்காதே பெண்ணே என்
நரம்பும்கூட தெரிக்கிறதே
வேர்வைப்போல உதிரம் இறங்கும்
நீ எந்தன் பக்கம் இல்லையேல்
பிழைதானா காதல் பிழைதானா
நீயுமின்றி வாழ்வது பிழைதானா
கண்கள் அழுகிறதே
காதலி சுவாசம் திணர்கிறதே
மடியினில் எந்தன் உயிரும்
சாக துடிக்கிறதே....
No comments:
Post a Comment