உன்னை பார்க்கும் போதெல்லாம்
இதயத்தில் பூப்பூக்கும்
எனக்குள்ளே காதல் தோன்றுமே
மடி கொண்டு வா பெண்ணே
உயிர் கொண்டு நான் வருவேன்
சுகமாக சாக தோன்றுமே
கனவினில் நீ வரும்பொழுது
என் இரவுகள் தினம் தினம் விருந்து
அது உயிருக்கு குணம் தரும் மருந்து
இது ஒரு புது சுகம்
இது காதலில் விழுகின்ற பருவம்
மனம் தனிமையை ரசித்திட விரும்பும்
சில மௌனத்தில் புது மொழிகள் பிறக்கும்
விதி தரும் அனுபவம்
உடம்பில் சில மாற்றங்கள் தோன்றும்
நிழலும் இங்கு சுமையென போகும்
மெதுவாய் இனி கரைந்திட தோன்றும்
இது என்ன காற்றில் இன்று
எந்தன் உயிர் பறக்கிறதே
பகலெல்லாம் பூக்கள் கொண்டு
நீ வர துடிக்கிறதே
மழைக்கால மேகம் எல்லாம்
எந்தன் வானில் மிதக்கிறதே
தீக்கூட தீண்டும் போதும்
பனிக்காற்றாய் இனிக்கிறதே
உயிர் தோண்டி போகும்
உன் விழி பிடிக்கும்
கண் கொத்தி போகும்
உன் இதழ் பிடிக்கும்
செவியோடு சில பாடல்கள் ஒலிக்கும்
மனதோடு ஒரு மழை அடிக்கும்
புல் மீது விழும் பனித்துளி போல
என் மீதும் காதல் விழுந்திடுமே
No comments:
Post a Comment