Visitors

free hit counter

Thursday, 8 January 2015

எனை ஏன் வெறுத்தாய்!!!


பூ  ஒன்றை  ஏந்தி  நான்
நின்றால்  பாவமோ!
வாங்காமல்  சென்றால்
என்  வாழ்வின்  சாபமோ!
தீப்பார்வை  பார்த்தால்
என்  நெஞ்சம்  தாங்குமோ!
நீயின்றி  போனால்  என்
உயிரும்  வாழுமோ!
பூவை  பறித்ததால்
கைகள்  காயம்  அடைந்ததே!
சுவாசம்  கொடுத்திடும்
தென்றல்  காற்றும்  கொதிக்குதே!

நினைத்து  உருகி  பிறக்கும்  காதல்
உலகம்  அழிந்தும்  அழியாதே!

இதயம்  அறுத்து  வெளியில்  போட்டால்
உந்தன்  காதல்  மறக்காதே!

வானில்  போகிற  மேகக்கூட்டமும்
அமிலம்  தூறி  போகும்!

அடி  நீயும்  என்னையே  ஒதிக்கிப்பார்ப்பதால்
உள்ளம்  தீயில்  வேகும்!

நிலவின்  ஒளியும்  என்னை  எரிக்கும்
விலகி  நீயும்  போகாதே!
வார்த்தை  கொன்று  மௌனம்  தந்து
என்னை  நீயும்  வாட்டாதே!

காலம்  காலமாய்
காதல்  வேண்டியே
காத்திருக்கும்  உள்ளம்!

அடி  நீயும்  என்னையே
மோசம்  செய்வதால்
கண்கள்  படைக்கும்  வெள்ளம்!

No comments: