Visitors

free hit counter

Thursday, 8 January 2015

ஏன் வெறுத்தாய்


கண்ணிலே  காந்தம்  வைத்து
நெஞ்சிலே  காதல்  தைத்தாய்
உன்னை  நான்  தேடும்போது
மேகமாய்  ஓடி  சென்றாய்
அழகாலே  பூ  விரித்தாய்
ஓ! பெண்ணே!  பெண்ணே!
அதில்  கூட  முள்ளை  வைத்தாய்
விழி  மூடி  தூங்கையிலே
என்  கண்ணே!  கண்ணே!
இமை  ரெண்டும்  திருடி  விட்டாய்

காற்றாய்  காற்றாய்
என்னில்  சுவாசம்  தந்தாய்
ஏனோ  ஏனோ  தீயும்  தந்து  போனாய்
காதல்  தந்து  கண்கள்  பிடுங்கி  போனாய்
போகும்போதே  உயிரும்  அற்று  போனாய்
காதல்  செய்தால்  பாவம்
என்  நெஞ்சம்  அறியாதே!
காலம்  கொன்று  போகும்
இந்த  வாழ்க்கை  புரியாதே!
ஓ! பெண்ணே  வெறுத்தாய்
மண்ணில்  என்னை  புதைத்தாய்
முன்பு  உன்னாலே  எனை  மறந்தேன்
இன்று  என்னையே  நான்  இழந்தேன்

வானில்  போகும்  நிலவு  போல  இருந்தாய்
ஏனோ  ஏனோ  வானம்  தேய்த்து  போனாய்
வாசம்  வீசும்  பூவை  போல  இருந்தாய்
உயிரில்  கலந்து  என்னை  முழுதும்  கரைத்தாய்
காதல்  தோற்று  போனால்
என்  பூமி  சுத்தாதே!
உயிரும்  செத்து  போகும்
அது  உனக்கு  புரியாதே!
ஏய்!  பெண்ணே  சிரித்தாய்
உன்னை  நெஞ்சில்  விதைத்தாய்
காதல்  சொல்லாமல்  என்னை  கொல்லாதே!
எந்தன்  கண்ணீரில்  கப்பல்  ஓட்டாதே!!!

No comments: