என் வானம் தொடுகின்ற வென்மேகமோ
என் சுவாசம் தருகின்ற பூந்தேன்றலோ
உன்னாலே என் பாவமும்
இன்றோடு முடிகின்றதே
என் வாழ்வும் ஒளிர்கின்றதே
பூவே பெண் பூவே பார்த்தால் என்ன
காற்றாய் தொடும்போது சிரித்தால் என்ன
மின்னல் போலவே நீ
என்னை கடந்தாய்
உன் புன்னகையால் என் மனதை
கொள்ளை கொண்டு போனாய்
பார்வையிலே எந்தன் இரவுகளை
அடி நித்தம் நித்தம் கழுமரம்
ஏற்றி நீயே கொன்றாய்
தேவதை போலவே நீ இங்கு வந்தாய்
என் நெஞ்சில் மழைச்சாரல் தூறுதே
நிலவா? ஒளியா?
என்னவென்று சொல்ல...
உச்சிவெயில் கூட குளிர்கின்றதே
அடி உன்னழகை காணும்போது
கண்கள் போனதே
பனிக்காலமும் இங்கு வேர்த்து கொட்டுதே
உந்தன் பார்வை தாக்கும் போது
நெஞ்சம் போனதே
பெண்மகள் நீயும் என் வழி வந்தால்
மலர்களாய் பாதத்தை தாங்குவேன்
பாராமலே போகாதடி
என் ஜீவனும் வாழாதடி!!!
No comments:
Post a Comment