புன்னகை சிந்திடும்
பூவிதழ் மொத்தமும்
என்னுயிர் தின்றதே
பார்வைகள் வீசிடும்
கண்விழி ரெண்டுமே
காலங்கள் கொன்றதே
மென்மையாய் தீண்டிடும்
கைவிரல் பத்துமே
என்னுடல் கரைத்ததே
தீயினை மூட்டிடும்
சுவாசத்தின் மூச்சுமே
இன்பத்தை தந்ததே
நிலத்தில் கோலமிடும்
கால்களின் பாதமும்
என் மனம் பறித்ததே
கண்களில் மின்னிடும்
பூமியின் தேவதையால்
காதலும் பிறந்ததே
No comments:
Post a Comment