பூவில் தூங்கும் மகளோ
வானில் காயும் நிலவோ
எனை தீண்டிச்செல்லும்
தென்றல் காற்றோ
நீலக்குயிலின் குரலோ
நான் நெடுநாள் கண்ட கனவோ
எனை வாட்டிச்செல்லும்
காதல் சிற்பமோ
அய்யய்யோ என்னை கொல்ல
இவளும் பிறந்தாளே
சிறகின்றி வானில் பறக்க
கற்று தந்தாளே
கண்பார்வை தீயாலே
என் நெஞ்சை சுட்டாளே
தேன் சிந்தும் புன்னகையால்
நெஞ்சள்ளி போனாளே
No comments:
Post a Comment