நானும் இங்கே நீயும் அங்கே
வாழும் காலம் எங்கே
பிரியும்போது கண்ணீர் வடிக்க
கண்ணீர் வழியே கண்ணை கரைக்க
துடைக்க கைகள் வருமே என்று
காத்திருந்து வெள்ளம் படைக்க
இரவும் பகலும் உனையே நினைக்க
கனவில் தழுவ நெஞ்சம் தவிக்க
காற்றும் கூட சுவாசம் திணற
வீசி போக இதயம் துடிக்க
பூக்கள் கூட வெறுப்பாய் தோன்ற
காலச்சக்கரம் மெதுவாய் சுழல
நிமிடம் எல்லாம் யுகமாய் மாற
நிலவின் ஒளியும் எனையே உருக்க
நடக்கும் ஜடமாய் நானும் இருக்க
மார்கழி இங்கே சித்திரை ஆக
மழையின் துளியும் அமிலம் ஆக
வருவாய் என நான் தவமாய் இருக்க
வரங்கள் வேண்டி இன்பம் தொலைக்க
இப்படி இருப்பாய் நீயும் எனை போலே
பொறுப்பாய் கண்ணே
வருவேன் தருவேன் எனையே
வாழ்வோம் தொடுவோம் விண்ணையே
நிஜமும் நிழலும் போல
இணைவோம் இருப்போம்
மகிழ்வோம் மறப்போம் நமையே!
No comments:
Post a Comment