Visitors

free hit counter

Wednesday, 7 January 2015

என் செய்தாய் என் அன்பே!


என்  அன்பே  என்  அன்பே
என்  செய்தாய்  என்  அன்பே
கனவில்  வந்து  நெஞ்சை  பறித்தாய்
இன்னும்  என்னவோ!
காதல்  தந்து  என்னில்  நுழைந்தாய்
இன்னும்  என்னவோ!
இன்பமான  இம்சை  பண்ணவோ.....

நெஞ்சம்  அது  பூக்கும்
காலங்கள்  தீரும்
பெண்ணே  நீ  அருகில்  இருந்தாலே..
நிழல்  கூட  சுமையாய்
எனக்கிங்கு  தோன்றும்
கண்ணே  நீ  தொலைவில்  சென்றாலே...
உன்னை  நான்  விடமாட்டேன்
உனக்காக  தவம்  பூண்டேன்
இரவோடும்  பகலோடும்  பல
போர்கள்  நான்  போட்டேன்..
என்  இதயத்தின்  துடிப்பாய்
நீ  என்றென்றும்  இருப்பாய்
என்  அன்பே  வாழ்வே  நீதானே!

பூவோடு  கொஞ்சும்  காற்றாக  வந்தாய்
என்  சுவாசம்  உன்னில்  கண்டேனே
நான்  செய்த  பாவம்  உன்னாலே  போகும்
சொர்க்கத்தை  கண்ணில்  கண்டேனே
உன்  பேரை  நான்  எழுதி
என்னை  நான்  வாசித்தேன்!
நீ  காட்டும்  அன்புதனில்
நான்  இங்கு  ஜீவித்தேன்!
உயிர்  பிரிந்தாலும்  பிரிவேன்
உன்னை  மட்டும்  நீங்க  மறுப்பேன்
என்  அன்பே  உயிரே  நீதானே!!!

No comments: